பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

27


(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறளில்தான் எத்துணை நுணுக்கங்கள் படை, குடி முதலிய ஆறும் உடையவன் அரசருள் ஏறு என்றால், ஆறுள் ஒரு சில குறைந்தவன் அரசன் எனப் பெறானா? உலகில் வாழ்ந்த அரசர் அனைவரும் ஆறும் உடையவராய் இருந்தனரா? ஒன்றிரண்டு குறைய ஆண்ட அரசர்கள் இருந்ததே யில்லையா?

உடம்பில் இன்னின்ன ஆற்றல்கள் (வைடமின் சத்து) இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவை அனைத்தும் பெற்றிருப்பவர் முழுவாழ்வு வாழ்வர். அவற்றுள் ஒரு சில குறைந்தவர் அரை குறை வாழ்வே அடைவர். அது போன்றதே அரசர்கள் வாழ்வும். மேற்கூறிய ஆறனுள் ஒரு சில குறைந்தவர் அரைகுறை அரசரே! அவர்களைச் சிற்றரசர் - குறுநில மன்னர் என்றெல்லாம் குறிப்பிடுவர், அந்த ஆறும் பெற்றவனே முழு அரசன்-அதாவது-அரை குறை அரசர்க்கெல்லாம் பெரிய அரசனாவான். என்பது இக்குறட் கருத்து.

இங்கே ஓர் ஐயம் அகலாமல் மனத்தை உறுத்தலாம், அரசர்கள் குறைந்துபோன இக்குடியரசுக் காலத்தில். சனநாயகக் காலத்தில் அரசரைப் பற்றிப் பேசும் திருக் குறள் ஏன்? என்ற ஐயம் எழுவது இயற்கைதானே!

யார் சொன்னது இப்போது அரசர்கள் இல்லையென்று? குடியரசாவது? சனநாயகமாவது? இப்போதும் எங்கே பார்த்தாலும் எந்த ஆட்சியும் பெரும் பாலும் ஒரிருவர் கைகளில்தான் சிக்கிக்கொண்டுள்ளது. அவர்கள்தாம் அரசர்கள். ஆனால் அப்போது அரசுரிமை குடும்ப உரிமையாக இருந்தது. இப்போதோ ஆரும் (அன்னக் காவடிகளும்) அரசராய் வரலாம். அவ்வளவுதான் வேற்றுமை! இப்போதுள்ளவரை நாட்டுத் தலைவர் என்-