பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

55


இக்குறளின் கருத்து. இதனுள் இன்னுஞ் சில நயங்கள் இருக்கின்றன.

இவளோ பெண் தகைப் பேதையாவாள். பெண் தகை என்றால் பெண் தன்மை - அதாவது விரும்புதற்குரிய தன்மை -- அன்புக்குரிய தன்மை. அன்பு என்னும் பண்பு இருக்கவேண்டிய இடத்தில் கொலை புரியும் வன்பு உள்ளதே! இது இயற்கைக்கு மாறுதானே?

மேலும், பேதை என்றால், ஒன்றும் அறியாத இளஞ்சிறுமி என்பது பொருள், பெண்களின் பருவ நிலையை ஏழாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை தெரிவை, பேரிளம் பெண் என்பன அவை. இவற்றுள் பேதைதான் முன் நிலை. ஐந்து வயதுக்கு மேல் ஏழு வயது வரையும் போதைப் பருவம் எனக் கணக்குஞ் செய்துள்ளனர். எனவே, பேதை என்பவள் ஒன்றும் அறியாத இளஞ்சிறுமி என்பது இப்போது நன்கு விளங்குமே! பேதை என்பதற்கு அறியாமை என்ற பொருளும் உண்டு, இனிக் குறளுக்கு வருவோம். இவள் பார்வைக்கு ஒன்றும் அறியாத இளஞ்சிறுசிறுமிபோல் காணப்படுகிறாள். (இவள், உண்மையில், ஏழு வயது நிரம்பாத இளஞ்சிறுமியல்லள். இளம் பெண் என்பதை அறிவிக்கும் ஒரு கற்பனையே.) ஆனால், அவள் பார்வையிலோ கொலைக் கொடுமை இருக்கிறதே! இஃதென்ன வியப்பு. இயற்கைக்கு மாறாயுள்ளதே! இவ்வாறெல்லாம் இக் குறளுக்குப் பொருள் நயம் உ.ரைத்துக் கொள்க.

கண் பார்வையின் கொடுமை படிப்படியாக மிகுகிறது. இக்குறளுக்கு முன்முன் குறளில் கண்ணோக்கை, அணங்கு படை கொண்டுவந்து தாக்குவதாகப் புனைந்தார் (வருணித்தார்); முன் குறளில் எமனென எடுத்தோதினார்; இக்குறளிலோ கண்டவரது உயிரை உண்ணுவதாக