பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஆழ்கடலில்


காலை மட்டும் தடவிப் பார்த்த குருடா 'யானை உரல் போல் இருக்கிறது' என்றானாம். காதை மட்டும் தடவிப் பார்த்த குருடன் 'யானை முறம்போல் இருக்கிறது' என்றானாம். தும்பிக்கையை மட்டும் தடவிப் பார்த்த குருடன் 'யானை உலக்கைபோல் இருக்கிறது' என்றானாம். ஆனால், இந்த ஒவ்வொன்றும் மட்டும் யானையாகாதே! இத்துணை யும் யானை யிடம் உள்ளன. இதுபோலவே, அம் மூன்று தன்மைகளும் அவளது கண் பார்வையில் உள்ளன.

இந்தக் குறளில் 'சுருதி' கொஞ்சம் இறங்கியிருக்கிறது. கொலை நோக்கோடு ஏதோ குறிப்பு நோக்கும் கலந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றதல்லவா? ஆம்; பின்னர் திருமணம் புரிந்துகொள்பவர்களாயிற்றே!

பொருள்பால்
அரசியல் - இறைமாட்சி
நீங்கா நிலன் ஆள்பவற்கு
"தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு"

(பதவுரை) தூங்காமை - சோம்பல் கொள்ளாமையும். கல்வி = சிறந்த கல்வி உடைமையும், துணிவுடைமை = நல்ல துணிச்சல் உடைமையும் ஆகிய, இம்மூன்றும் = இந்த மூன்று பண்புகளும், நிலன் ஆள்பவற்கு = நாடாளும் வேந்தனுக்கு. நீங்கா = நீங்காது இருக்க வேண்டியவையாகும், (தூங்குதல்-சோம்புதல், தூங்காமை - சோம்பல் கொள்ளாமை; நிலன்-நிலம்- நாடு.)