பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 37 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அ.காத பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் நான்குஇடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால், கெடுமாம் இடர். ' என்பது பொய்கையார் திருவாக்கு. எம்பெருமான் ஒவ்வொரு திவ்விய தேசத்திலும் எழுந்தருளியிருக்கின்ற நிலைகளை நாம் அநுசந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்கின்றார். திருவேங்கடத்தில் எம்பெரு மானின் நிலை நின்ற திருக்கோலம்; விண்ணகரில் (வைகுந்தம்) இருந்த திருக்கோலம்; வீற்றிருந்து ஏழ் உலகும். தனிக் கோல்செல்ல என்பது திருவாய் மொழி காண்க (திருவாய். 4.5:1). திருவெஃகாவில் அவன் நிலை கிடந்த திருக்கோலம்; திருக்கோவலூரில் உலகளந்த திருக் கோலமாகச் சேவை சாதிக்கும் இடத்தை நடந்த திருக் கோலமாக அநுசந்திப்பது உண்டாதலால் பூங்கோவல்... நடந்தான் என்கின்றார். இந்த நான்கு திருக்கோலங்களை அநுசந்தானம் செய்தால் இடரெல்லாம் நீங்கிவிடும் என்பது பொய்கையாழ்வாரின் கொள்கை. அடுத்து பூதத்தாழ்வார் பாசுரம் ஒன்றைக் காண்போம். பயின்றது அரங்கம் திருக்கோட்டி, பல்நாள் பயின்றதுவும் வேங்கடமே, பல்நாள் பயின்றது அணிதிகழும் சோலை அணிநீர் மலையே. மணிதிகழும் வண்தடக்கை மால்." (பயின்றது . நித்தியவாசம் செய்தது) 11. முதல். திருவந்.?7 12. ஒப்பிலியப்பன் ச ந் நிதி யாக க் கொள்ளல் பொருந்தாது. காரணம் இங்கு வீற்றிருக்கும் திருக்கோலம் இல்லை. ஆனால் கச்சிமா நகரிலுள்ள பரமேசுவர விண்ணகரைக் கொண்டால் குறை வராது. 13. இரண். திருவந். 46