பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 103 அளை முழைஞ்சு: பிரசவாரி.தேன் வெள்ளம்; அருள் செயும்.கொடுக்கும்.) என்பது இக்காட்சியைச் சித்திரிக்கும் ஆழ்வாரின் சொல் லோவியம். இங்கு ஆண்யானை தன் பெண் யானைக்கு ஒரு தேன் தோய்ந்த மூங்கிற் குருத்தைத் தந்து அதனை மகிழ்விக்கின்றது. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும் படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறைப் பொருள். எம்பெருமானார் திருமலைக்கெழுந்தருளித் துவயத்தின் பொருளைத் திருமந்திரத்தோடும் சரமசுலோகத்தோடும் உபந்யசித்த பொழுது அனந்தாழ்வான் இப் பாசுரத்தை உடையவர் பரமாக நிர்வகித்தருளினர். இந்தக் காட்சியை நினைவிற் கொண்ட கம்பநாடன், சித்திரகூடமலையில் இத்தகைய காட்சியொன்றினைச் சீதைக்கு இராமன் வாயிலாகக் காட்டுவான். உருகு காதலில் தழைகொண்டு மழலைவண் டோச்சி முருகு நாறுசெந் தேனினை முழைகின்றும் வாங்கி, பெருகு சூல்இளம் பிடிக்குஒரு பிறைமருப் பியானை, பருக வாயினில் கையில்கின்று அளிப்பன பாராய்: முருகு மணம்; நாறு வீசுகின்ற; முழை-கல் இடுக்கு; பெருகுசூல்-முதிர்ந்த கருப்பம்; மருப்பு. தந்தம்.1 இங்கு ஒருயானை சூல் கொண்டுள்ள தன் இளம்பிடியின் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒரு மலையிடுக்கில் தேன்கூடு கட்டப்பெற்று அடையில் தேன் ததும்பி நிற்கின்றது. உருண்டை வடிவில் காணப்பெறும் அதனைத் 22. கம்ப. அயோத். சித்திர. 10.