பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#55 ஆழ்வார்களின் ஆரா அமுது என்ற இவர் தம் வாக்கினாலேயே இவர் நான்கு வருணங் களுக்கு உட்படாத ஒரு வகுப்பில் பிறந்ததாக ஒப்புக் கொள்ளு கின்றார். பிறந்திலேன்' என்பதற்கு வளர்ந்தே னில்லை" என்று பொருள் கொள்கின்றனர் உரையாசிரியர்கள்; குருபரம்பரை ஆசிரியர்களும் இப்படியே கூறுகின்றனர். வளர்ந்த குலத்தைக் கருதியே அக்காலத்தில் இவரைத் "தாழ்ந்த குலத்தினராக சிலர் மதித்தனர் என்பது வைணவ ஆசிரியர்களின் கருத்து, கணிகண்ணனின் தோற்றம்: பெரியோர்களே, பிற் காலத்தில் இவருக்குச் சீடரான கணிகண்ணன் என்பானது பிறப்பைப் பற்றியும் இப்போது குறிப்பிட விரும்புகின்றேன். *உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் STS EU rr LH & ରଙ୍ଗିନ୍ଦ୍ କନ୍ଦ୍ ?* ' என்கின்றபடி இக் குழந்தை எம்பெருமானை அநுபவித்தலாகிய அமுத பானத்திலா லேயே உள்ளமும் உடலும் நிறைந்து உணவு நீர் வேட்கை இவை யொழிந்து காண்பவர் கேட்பவர் யாவரும் வியக்குமாறு வளர்ந்து வரும் செய்தியை அவ்வூரில் வாழ்ந்து வரும் வேளாளக் கிழவன் ஒருவன் கேள்வியுறு கின்றான். இவ்வரிய குழந்தையைச் சேவிக்க விரும்பி ஆவின் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு தன் மனைவி யுடன் ஒருநாள் காலையில் வருகின்றான். இவரது கிளரொளி இளமையைக் கண்டு மிக்க வியப்புற்றுத் தான் கொணர்ந்த பாலை இவர் முன்பு சமர்ப்பித்து உட்கொள்ளு மாறு வேண்டுகின்றான். அவனுடைய பக்தி மிகுதிக்குத் திரு வுள்ளம் உகந்து பாலை அமுது செய்தார் திருமழிசையார். பிள்ளையில்லாக் குறையினால் அவர்கள் இவரையே தமக்கு எல்லாப் பேறுமாகப் பாவித்து நாடோறும் வழக்கமாகப் பால் கொடுத்து வருகின்றனர். இங்ங்னம் அவர்கள் பக்தியமுதத்திற்கு உவந்து பானம் செய்து வந்தவர், ஒரு நாள் அவர்களது குறையைத் தீர்க்கக் 5. திருவாய். 6.7:1