பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

ஆழ்வார்களின் ஆரா அமுது


பொன்னாக்க வல்லதோர் இரசகுளிகையைக் காட்டி இதனைப் பெற்று மகிழ்வீராக’ என்று கூறுகின்றான். ஆழ்வார் அதனை வேண்டாவென்று விலக்கி பொன் னொத்த தமது திருமேனியின் புழுதியை எடுத்துத் திரட்டி உருண்டையாக்கி அவன் கையில் தந்து அன்பனே, இக் குளிகை பலகோடி கூழாங்கற்களைப் பொன்னாக்க வல்லது; இதனைக் கொண்டு நீ பிழைப்பை நடத்துவாயாக’ என்று. மறுமொழி கூறியருளுகின்றார். சித்தன் உடனே அதனைச் சோதித்துப் பார்க்கின்றான்; அதன் ஆற்றல் அவ்வாறே. இருக்கக் கண்டு மிக்க பக்தியுடன் ஆழ்வாரைத் தெண்டனிட்டு வணங்கி தன் வழியே போகின்றான். முதலாழ்வார்கள் சந்திப்பு: ஆண்டுகள் பல உருண் டோடுகின்றன. பக்திசாரர் மலைக் குகையொன்றில் தங்கி, யோகு செய்து வருகின்றார். வயது முதிர்ந்த நிலையில், பாகவத தருமத்திற்குப் புத்துயிர் அளித்த முதலாழ்வார்கள் திருத்தலப் பயணம் செய்துகொண்டு இவர் இருக்கு மிடத்திற்கு எழுந்தருளுகின்றனர். அவர்கள் இவரது அடக்கத்தையும் அந்தரான்மாவிடமிருந்து பொங்கும் ஆனந்தப் பெருக்கையும் இவர் முகத்தில் வழிவதைக் காண் கின்றனர். இந்த மகாதுபாவர் யாரோ? என்று ஐயுறு கின்றனர். ஆனால் சீடர் குருவை விரைவில் தெரிந்து கொள்ளுகின்றார். தமது உபதேசம் எவ்வளவு சிறந்த பலனை அளித்து விட்டதென்பதைத் தெரிந்து கொண்ட பேயாழ்வாரும் ஆனந்தக் கண்ணிர் சொட்ட, என் அருமை பக்தி சாரரே!” என்று ஓடிப்போய்த் தழுவிக் கொள்ளு கின்றார். பின்னர் நால்வரும் பாலுடன் பாலும், தேனுடன் தேனும் கலந்தாற் போலக் கூடியிருந்து திருவல்லிக் கேணியிலும் மயிலாப்பூரிலும் இறைவனை வழிபட்டுக் கொண்டும் பாகவத தருமத்தை அனுட்டானத்தாலும் உபதேசத்தாலும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சிறிது காலம் சென்றதும் ஒடித் திரியும் யோகிகளான முதலாழ்