பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$66 ஆழ்வார்களின் ஆரா அமுது: சமயத்தில் அவரைச் சரணமடைந்து வரங்கேட்டுப் பெற்று மாறாத இளம்பருவம் அடைந்து அழகிய மங்கையாகி விடுகின்றாள். அக்காலத்தில் காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னன் இவளது வடிவழகைக் கண்டு அவள்மீது காதலுறுகின்றான்; விலையுயர்ந்த அணிகலன்களையும் அழகிய பட்டாடைகளையும் அவளுக்கீந்து அவளையும். மணந்து கொள்ளுகின்றான்; பட்டத் தரசியாகவும் ஆக்கிக் கொள்ளுகின்றான் அரசன். இங்ங்ணம் இருக்கையில் அரசன் தன் இளமை நாளுக்கு நாள் குறைவதையும் தன் மனைவியின் பருவம் மாறுபடா திருப்பதையும் கண்டு வியந்து போகின்றான். தனது மனைவியை நோக்கி, நின்னுடைய மங்கைப் பருவம் எஞ்ஞான்றும் ஒருபடித்தாக இருப்பதற்குக் காரணம் என்ன?’ என்று விசாரிக்கின்றான். அவள் அது ஆழ்வாரின் வரப்பிரசாதம்” எனத் தெரிவிக்கின்றாள். உடனே அரசன் அவ்வருளை நானும் பெற்று இளமை மாறா திருந்தால் நினக்கு இன்பம் தந்து நானும் நின்பால் இன்பம் பெறலா மன்றோ? அதற்குரிய வழியைத் தெரிவிப்பாய்’ என்று அவளைக் கேட்கின்றான். அவளும், நாதா, நம் அரண்மனைக்கு நாடோறும் பிட்சுவாக வருகின்ற கணி கண்ணன் என்பவர் ஆழ்வாருக்கு மிகவும் வேண்டியவர்; அவரைத் துணை கொண்டு ஆழ்வாரை அணுகினால் தும் விருப்பம் நிறைவேறும் என்கின்றாள். அங்ங்ணமே மறுநாள் கணிகண்ணன் அரண்மனைக்குப் போந்தபோது அவனைத் தனியே அழைத்துச் சென்று உபசரித்து, உம் ஆசிரியரை நான் சேவிப்பதற்கு இங்கு அழைத்து வருதல் வேண்டும்' என வேண்டுகின்றான். கணிகண்ணன் 'நம் ஆசிரியர் ஒரிடத்திற்கும் எழுந்தருள மாட்டார்" என்று கூறிவிடுகின்றான், அரசன் விடவில்லை. என்னை அவரிடம் அழைத்துச் சென்றாவது அவரது திருவருட்கு இலக்காக்கவேண்டும்; அவரது திருவருளால் என்னை மாறாத இளைஞனாக்கவேண்டும் என்று வற்புறுத்து