பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


224 ஆழ்வார்களின் ஆரா அமுது. ஆளும் பேறுபெறினும், அஃது எனக்கு வேண்டா (2) என்கின்றார். உன்னைத் தவிர, என்னைக் காப்பார் யாருமே இல்லை (2) என்கின்றார். எல்லாப் பாசுரங்களும் பகவததுபவத்தைத் தருவதே என்பது பாசுரங்களை ஓதி உளங்கரையும்போது தட்டுப்படும். (8) வடநூல்கள் ஒன்றிலும் காணப் பெறாத ஒரு கதை -அணில்கள் சேது.கட்டவில் பங்கு பெற்ற கதை-இவர் அருளிச் செயல்களில் காணப்படுகின்றது. குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி தரங்கநீர் அடைக்க லுற்ற சலமிலா அணினும் போலேன் (27) என்ற பாசுரத்தில் இக்கதை பற்றிய குறிப்பு காணலாம். இராமாவதாரத்தில் பெருமாள் இலங்கை நகர் எழுந்தருள் வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது வாணர முதலிகள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைச் சில அணிற்பிள்ளைகள் காண்கின்றன. இவ் வாணர வீரர்கள் பெருமாள் விஷயத்தில் தம் ஆற்றலுக் கேற்ற செயலைப் புரிந்தால், நாமும் நமது ஆற்றலுக் கேற்றவாறு இப்பெரிய செயலில் ஈடுபட வேண்டும்" என்று. எண்ணுகின்றன. இவை கடலில் முழுகுவது, கரை மேல் மணலில் புரள்வது, உடலில் ஒட்டிக் கொண்ட மணலைக் கடவில் கொண்டு போய் உத்துவது-இப்படிப்பட்ட ஒரு. செயலில் சேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவி புரிந்ததாக, ஓர் இதிகாசம் ஆழ்வார் திருவுள்ளத்தில் எழுகின்றது. (9) இவர் காலத்தில் அணியரங்கன் திருமுற்றத்தை பரமை காந்திகளாய் எப்போதும் பற்றிக் கிடந்து வாழும். சோம்பராகிய பரம பாகதவதர்கள் விஷயத்தில் அரங்கன் திருவுள்ளம் உகந்திருப்பதை அவர்தம் முக விலாசத்தில் காண்கின்றார். இதனை,