பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


232 ஆழ்வார்களின் ஆரா அமுது தங்கள் அழகிய சிறகுகளை உதறிக்கொண்டு துயிலை நீக்கு கின்றன (2). எங்கும் கதிரவன் ஒளி பரவுகின்றது. நட்சத் திரங்களும் குளிர்ந்த சந்திரனும் ஒளிமழுங்குகின்றன. இருட்படலம் அறவே நீங்குகின்றது. அதிகாலையில் எழும் இளங்காற்று சோலையிலுள்ள பாக்கு மரங்களின் மடலைக் கீற, அதனால் பாளைகள் மணம் வீசா நிற்கின்றன. (3), மேய்வதற்குக் கட்டவிழ்த்து விடும்போதும் எருதுகளின் கழுத்தில் கட்டிய மணி ஒலியும் ஆயர்களின் புல்லாங்குழல் ஒசையும் எங்கும் பரவுகின்றன. கழனிகளிலுள்ள வண்டு களின் திரள் ஆரவாரித்துக் கொண்டு கிளம்புகின்றன (4). சோலைகளிலுள்ள பறவைகளும் ஆரவாரஞ் செய்கின்றன (5). இப்படியெல்லாம் அதிகாலையின் சூழ்நிலை அமைந் திருப்பதை எடுத்துக் காட்டுகின்றார் ஆழ்வார். திருப்பள்ளி எழுச்சி என்ற பிரபந்தம் அதிகாலையில் திருமால் ஆலயங்களில் ஒதப்பெறுகின்றது இன்று திருமலையில் திருவேங்கடவாணனின் திருமுன் சுப்ரபாதம் ஒதப் பெறுவதுபோல். இஃது இறைவனை எழுப்புவதற் காக ஒதப்பெறுவதாக ஐதிகம். தொண்டரடிப் பொடி வாழ்வார், அரங்கத் தம்மா பள்ளி எழுந்தரு ளாயே! எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! என்று எம்பெருமானைத் துயில் எழுப்புகின்றார். இவ் விடத்தில் மணிவாசகப் பெருமானின் திருப்பள்ளி எழுச்சி யும் பாரதியாரின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி யும்' நினைவுகூரத்தக்கவை. அடியார்கள் இருவரும் இறைவனை எழுப்பிய செயலைப் பாரதமாதாவினை எழுப் பியதாகப் பாடி முன்னோர் மொழியையும் பொருளையும் பொன்னேபோல் போற்றிப் புதுத்துறையில் புகுத்திய 34. திருவாசகத்திலுள்ளது. இது திருப்பெருந்துறை யில் பெருமானால் அருளப் பெற்றது. 35. பாரதியார் கவிதைகள் . காண்க.