பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குலசேகரப் பெருமாள் 275 விரும்புவதைவிட எம்பெருமானின் திருவருள் நோக்கம் பதியுமாறு அவன் திருக்கண் முகப்பிலே மெய்யடி யாரோடு பிறரோடு வாசியற எல்லோரும் இடைவிடாது நடமாடும்படியான ஒர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியான ஒர் அறிவையும் பெறக் கடவேன்' என்று தமது சிறப்பான விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே (9). என்பது ஆழ்வாரின் விண்ணப்பம். இப்பாசுரத்தை அடி யொற்றியே திருமால் ஆலயங்களில் கோயிலின் உள் வாசற்படி குலசேகரன் படி என்று இவர் பெயரையிட்டு வழங்கப்படுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.

படியாய்க் கிடக்கவேண்டும் என்று வேண்டிய புருஷார்த்தம் கிடையாதொழியினும் ஒழியும்; ஏனெனில் திருமலை சந்நிதிக்குள் கருங்கல் படி யிருப்பது செல்வச் சீமானாகிய திருவேங்கடமுடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று சில பணக்கார பக்தர்களுள் ஒருவர் அப் படியை பொற் கவசத்தால் மூடுதல் கூடும். அப்போது நாம் அப்பனின் திருமுக மண்டல சேவையை இழந்தோ மாவோம். ஆகையால் கிடப்பதும் பாங்கல்ல' என்று ஆறுதியிட்டார். பின்னர் எந்தப் பிறவியை வேண்டலாம் என்று யோசிக்கும்போது ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு இடையூறு இருப்பதாகவே புலப்பட்டது. இறுதியில் ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பவில்லை. و له G که بچه،

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே (10).