பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஆழ்வார்களின் ஆரா அமுது

பக்தி பெரியாழ்வாரின் ஞான பக்தியைக் காட்டிலும் பெரிதாயிருந்ததைக் கண்டு வில்லிபுத்துரர் வாசிகள் வியப் படைந்து மகிழ்ந்தார்கள். இத்தகைய பக்தி இவளுடைய அற்புதமான கவிதையில் வெளிப்பட்டுவருவதைக் கண்டு அவர்கள் பெருவியப்பு அடைந்தார்கள். கோதைப் பிராட்டியின் பக்தி காதலாகப் பரிணமித்தது. வயது ஏற. ஏற இவளுடைய பக்திக் காதல் அதிகரித்துக் கொண்டே வத்தது. பிள்ளைப் பருவத்திலேயே தம் மகள் அடைந்து வரும் வளர்ச்சி நிலையைக் கண்டு ஆழ்வார் பூரித்துப் போனார். இளமைப் பருவம்: தந்தையைப் போலவே மகளும் இயற்கை யழகுகளிலெல்லாம் அழகனாகிய கண்ணனையே. கண்டாள். கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூர்இருள்தான் வண்டுஅறாப் பூவைதான் மற்றுந்தான் கண்டநாள் கார்உருவம் காண்தோறும் கெஞ்சு ஓடும்-கண்ணனார் பேர்உரு என்று எம்மைப் பிரிந்து, பூவையும் காயாவும் லேமும் பூக்கின்ற காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும்-அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று." 8. பெரி. திருவந், 49,73.