பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

128


ஆயனாய மாயம் என்ன மாயமோ என்றும் அயர் மாதர் பிள்ளையாகி எம் பிரானுமான வண்ணம் என்னவோ? என்றும், கோவியல் வாய முதை உண்டவனே! என்றும் பேய்ச்சி பாலை உண்டாயே எனவும் காளிங்கன் மீது களி நடம் புரிந்தவனே! என்றெல்லாம் கசிந்துருகிப் பாடுகிறார்.

பார் மிகுந்த பாரா முன்னொ

ழிச்சுவான் அருச்சுனன்

தேர்மிகுத்து மாய மாக்கி

நின்று கொன்று வென்றி சேர்

மாரதர்க்கு வான் கொடுத்து

வையம் ஐவர் பாலதாம்

சீர் மிகுந்த நின்னலால் ஒர்

தெய்வம் நான் மதிப்பனே!


என்று பாடி மகிழ்கிறார்.

தொண்டரடிப் பொடியாழ்வார்



தொண்டரடிப் பொடியாரின் திருமாலைப் பாசுரங்கள் தனிப் பிரசித்தமான பாடல் தொகுதியாகும். அப்பாசுரங்களில் ஆழ்வார் அரங்கனின் பெருமைகளை விளக்கி மிகவும் உருக்கமாகப் பாடுகிறார். அதில் கண்ணனைப் பற்றி

மற்று மோர் தெய்வ முண்டோ

மதியிலா மானிடர்காள்

உற்ற போதன்றி நீங்கள்

ஒருவன் என்று ணர மாட்டீர்