பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வாகரும் பாதியும் - அ. சீனிவாசன் 145

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த எந்தையிடம்

என்றும் பாடி மகிழ்கிறார்.

திருக் கூடலூரில் எழுந்துள்ள பெருமானை,

தாம் தம் பெருமையறியார், தூது வேந்தர்க் காய வேந்தரூர்

என்றும்,

செறும் திண் திமிலேறுடையபின்னை பெரும்தண் கோலம் பெற்றாரூர்

என்றும் ஆழ்வார் பாடுகிறார்

திருவரங்கத் திருக்கோயிலில் பள்ளி கொண்டுள்ள

அரங்கநாதப் பெருமானைக் கண்ணனாக பாவித்துப் பல பாடல்களையும் ஆழ்வார் பாடுகிறார்.

கலையுடுத்த அகலல்குல் வன்பேய் மகள்

தாயென முலை கொடுத்தாள் உயிருண்ட வன் வாழுமிடம், என்றும், கஞ்சன் நெஞ்சும் கடுமல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடராழியான் வாழுமிடம், என்றும் பாடுகிறார். பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப்

பகவலவன் ஒளி கெட, பகலே

ஆழியால் அன்றங் காழியை மறைத்தான்

என்றும்