பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 145

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால்

பெருநிலம் விழுங்கி, அது மிழ்ந்த

வாயனாய், மாலாய் ஆலிலை வளர்ந்து

மணிமுடி வானவர் தமக்குச்

சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்

சிந்தனையுள் வெந்துயர் அறுக்கும் ஆயனாய் அன்று குன்ற மொன்றெடுத்தான்

அரங்க மாநகர் அமர்ந்தானே

என்றும் உள்ளமுருகப் பாடுகிறார்.

திருப்பேர் நகர் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள அப்பக் குடத்தானை,

வெண்ணெய் தானமுது செய்ய

வெகுண்டு மத்தாய்ச்சி யோச்சி

கண்ணியார் குறுங் கயிற்றால்

கட்ட வெட்டொன்றிருந்தான்

என்று பாடி மகிழ்கிறார்.

உப்பலியப்பன் கோயிலில் எழுந்தருளியுள்ள சீனிவாசப் பெருமானைக் கண்ணனாகப் பாண்டவர் தூதனாகப் பாவித்து,

போதார் தாமரை யாள் புல

விக்குல வானவர் தம் கோதா, கோதில் செங்கோல் குடை

மன்னரிடை நடந்த