பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 161

ஏவி சூரியனை மறைத்துவிட்டான். ஆகாயம் இருண்டு விட்டது. அர்ஜுனன் தீயை வளர்த்தான். அவன் தீயில் குதிக்கப் போவதை வேடிக்கை பார்க்க கவுரப்படைகளும் குவிந்தன. ஜயத்ரதனும் வந்தான். கண்ணன் சக்கரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். சூரிய வெளிச்சம் வெளிப்பட்டது. அர்ஜுனன் வில்லை எடுத்து கணை தொடுத்துப் போர் செய்து ஜெயத்ரதனைக் கொன்றான் என்பது பாரதக் கதை. பாண்டவர்களைக் காக்கக் கண்ணன் இவ்வாறு ஒரு அறிய சாகசச் சூழ்ச்சியைச் செய்தான். தருமத்தை நிலை நாட்டக் கண்ணன் பல அரிய செயல்களைச் செய்தான் என்பதும் அவைகளில் இதுவும் ஒன்று என்னும் வகையில் கண்ணனுடைய செயலை வியந்து ஆழ்வார் அருமையாகப் பாடுவதைக் காண்கிறோம்.

“மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத் தியங்கும் எறி கதிரோன் தன்னை முயங்கமருள் தேராழியரால் மறைத்த தென்நீ திருமாலே

போராழிக் கையால் பொருது?”

மண்ணும் விண்ணும் விழுங்கிய உன்வாய் அவ்வளவு பெரியதா என்று வியந்து மண்ணும் மலையும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் எண்ணில் அலகளவு கண்ட சீராழியாய்க்கு அன்றிவ்வுலகளவும் உண்டோ உன் வாய்? என்று அதிசயித்துப் பாடுகிறார்.

இன்னும் கண்ணபிரானின் திருவிளையாடல்களையும் அருஞ்செயல்களையும் அதிசயித்து மேலும் பாடுகிறார்.

" நான்றமுலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய் தோன்றவுண்டான் வென்றிசூழ் களிற்றை-ஊன்றி