பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 171

கண்ணனுடன் இணைந்து நாயகி-நாயக பாவத்தில் பாடியுள்ளார். நாயகி-நாயக பாவத்தில் மய்யமாக இருப்பது அன்பு, காதல், மோகம், சேர்க்கை, பிரிவு ஊடல், கூடல், தூது, மனைமாட்சி முதலியனவாகும். தலைவி, தலைவனுக்குத் துணையாக தோழி, செவிலி, பாங்கி, தோழன், பாங்கன் ஆகியோரும், தூதாக நெஞ்சமும், மேகமும், பறவைகளும் வருகிறார்கள். பருவகாலங்கள், காலை, மாலை, இரவு, வெயில், குளிர், வெப்பம், துரல் மேக மூட்டம், தென்றல், குளிர்ந்த காற்று வெப்பமான காற்று, மலர்கள், மணம், முதலிய இன்பமும் துன்பமும் விளைவிக்கின்ற பல காரணிகளும் வருகின்றன. இவையெல்லாம் மிக்க நயமாக, மிகுந்த சுவையுடன் எல்லாவற்றிற்கும் மேலாக பக்திரசம் இணைந்து பாசத்துடன் பாடல்கள் பாடப்படுகின்றன.

எம்பெருமானிடம் ஆழ்வார் விண்ணப்பம் செய்கிறார். அத்துடன் பாடல் தொடங்குகிறது. -

“பொய் நின்ற ஞானமும் பொல்லா

வொழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனிய

முறாமை, உயிரழிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்

தாய் இமையோர் தலைவா! மெய்ந்நின்று கேட்டருளாய், அடி

யேன் செய்யும் விண்ணப்பமே!”

என்று திருமாலிடம் தான் செய்த விண்ணப்பத்தை எடுத்துக் கூறுகிறார். -

“சூட்டு நன்மாலைகள் தூயன

வேந்தி விண்ணோர்கள் நன்னீர்