பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 170

ஆழ்வார்கள் பக்தி உணர்வுடன் பாடல்கள் பலவற்றையும் பாடியிருக்கிறார்கள்.

மனித வாழ்க்கையின் மய்யமாக இருப்பது மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையாகும். சொல்லப் போனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையே மய்யமானதாகும். ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதன் தனது ஆண் பெண் கூட்டுவாழ்க்கையை முறைப்படுத்தியிருக்கிறான் என்று கூறலாம். அதிலும் இந்திய தர்மம், இந்தியக் குடும்ப வாழ்க்கைக்குத் தனியான இலக்கணம் வகுத்து அதை ஒரு தலை சிறத்த அமைப்பாக சமுதாயத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படையாக நெறிப்படுத்தியுள்ளது.

குடும்ப வாழ்க்கையின் மய்யமாக இருப்பது குடும்பத் தலைவி-தலைவன் ஆகியோரின் இன்பகரமான இணைப்பான நெறிமுறைகளுக்குட் படுத்தப்பட்ட இல்வாழ்க்கையாகும். மனைமாட்சியாகும். இன்னும் நமது பாரத சமுதாயத்தின் குடும்ப அமைப்பு, நமது நாட்டின் பொருளாதாரத்தில் கூட அதாவது உற்பத்தி சேமிப்பு, பராமரிப்பு, வினியோகம் நுகர்வு முதலிய செயல்பாடுகளுக்கும் குடும்ப அமைப்பே அடிப்படை அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் பாரதம் உயர்வான நிலையை எட்டியிருக்கிறது.

இத்தகைய முறையிலான குடும்பத் தலைவி-தலைவரின் நல்லுறவுகளை ஆதரமாக வைத்து அன்பையும் அறனையும், பாசத்தையும் பாசப் பிணைப்பையும் ஆதாரமாக வைத்து ஆழ்வார்கள் ஆண்டவனையும் நாயக-நாயகி பாவத்தில் இசைபடப்பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். குடும்ப உறவுகளுக்கு, மனைமாட்சிக்கு ஒரு புனிதத் தன்மையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

நம்மாழ் வாரும் தன்னுடைய திருவிருத்தத்தைத் திருமாலுடன்