பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 177

"நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்று ழன்றாய்!

போயொன்று சொல்லியென்? போநெஞ்சே நீயென்றும் காழ்த்துபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன்தாள்

வாழ்த்துவதே கண்டாய் வழக்கு”

என்று பாடுகிறார்.

"சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட-அன்றங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய,

காருருவன் தான் நிமிர்த்த கால்”

என்று பாடுகிறார்.

"ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து திருத்தலாவதே? - சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர்,

இனத் தலைவன் கண்ணனால் யான்

என்று கண்ணனைப் பற்றிக் கொண்டு எனது மனக்கவலைகளையெல்லாம் தீர்த்துக் கொண்டேன் என்று நெஞ்சுருகிப் பாடுகிறார். அத்துடன் கண்ணனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு,

"அவனாம் இவனாம், உவனாம் மற்றும்பர் அவனாம் அவனென்றிராதே - அவனாம் அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலும் ஆம்” என்று

பாடுகிறார்.