பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 190

இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய் நின்றவென் சோதியை என் சொல்லி நிற்பனோ?

என்று தனக்குப் பாடும் திறனைக் கொடுத்த ஈசனைப் பாராட்டிப் பாடுகிறார்.

பகவானைக் கண்டு அவனது வடிவழகைக் கண்டு கழிக்கவும், பாடவும் விரும்புகிறார். கண்ணன்தான் எல்லாவிடத்திலும் எங்கும் நிறைந்திருக்கிறானே! கறந்த பாலுள் நெய்யாக நிறைந்திருக்கிறானே என்று பாடுகிறார்.

'பிறந்த மாயா! பாரதம்

பொருதமாயா, நீயின்னே

சிறந்த கால், தீ, நீர், வான், மண்

பிறவும் ஆய பெருமானே! கறந்த பாலுள் நெய்யே போல்,

இவற்றுள் எங்கும் கண்டுகொள்

இறந்து நின்ற பெருமாயா!

உன்னை எங்கே காண்கேனே!”

என்று பாடுகிறார்.

ஆழ்வாருக்குக் கண்ணன் தனது உடலிலும், உயிரிலும், உணர்விலும் கலந்துவிட்டான், இணைந்துவிட்டான் என்று உணர்கிறார். மிகவும் உயர்ந்த மேலான தத்துவ நிலையில் ஆழ்வார் கண்ணனை இணைத்துக் கொள்கிறார். எனவே தெருளும், மருளும் மாய்ந்துவிட்டன். அவை இனி, இல்லை எனக் கூறுகிறார்.

உணர்விலும்பர் ஒருவன்ை

அவனதருளால் உறல் பொருட்டு என்