பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 214

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி,

மெலிவு தவிர்த்திடுவான்”

என்று மிக அழகாகப் பாடுகிறார்.

சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச்

சிரித்துக் களித்திடுவான் - நல்ல

வண்ண மகளிர் வசப்படவே பல

மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன்

சொன்னபடி நடக்காவிடிலோ மிகத்

தொல்லையிழைத்திடுவான் - கண்ணன்

தன்னை இழந்துவிடில் ஐயகோ பின்

சகத்தினில் வாழ்வதிலேன்

என்று பாரதி நெஞ்சுருகக் கசிந்து பாடுகிறார்.

"கோபத்திலேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடுவான் - மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தளிர்த்திடச் செய்திடுவான் பெரும்

ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் - சுடர்த்

தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்

தீமைகள் கொன்றிடுவான்”

என்று அருமையாகப் பாடுகிறார்.