பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 226

பாரதியாரின் கவிதைகளில், கவிதையின்பச் சுவை, நகைச் சுவை, மென்மையான அவலச் சுவை, வியப்புச் சுவை, களிப்புச் சுவை, கோபம், தாபம், சாபம், இரக்கம், முதலிய பல சுவைகளையும் உணர்வுகளையும் காணமுடிகிறது. அதற்குள் அறிய கருத்துக்களும் தத்துவங்களும் லட்சியங்களும், உயர்ந்த குறிக்கோள்களும், சிறந்த செய்திகளும் எல்லாவற்றிற்கும் மேலாக தேச பக்த உணர்வும் ஆழ்ந்த நாட்டுப் பற்றும் இழையோடியிருப்பதையும் காண முடிகிறது. ஆக்கல், நிலை பெறுத்தல், நீக்கல் ஆகிய முத்தொழில்களுக்குரிய மூலவர்கள் மூவர் பற்றிய சண்டைகள், அதில் குறிப்பாக சைவ வைணவ சமயப் பிணக்குகள், வேறுபாடுகள் முதலியன நமது நாட்டில் பல இடங்களிலும், வெளிப்படுகின்றன. இவைகளுக்குள் ஒற்றுமை காணவும் பல முயற்சிகளும் இருந்திருக்கின்றன. அதில் உடன்பாடுகளும் சிறப்பாக ஏற்பட்டுள்ளன. அன்னை மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இரங்கும் புனித விழாவும் இணைந்து காட்சியளிப்பதைக் காண்கிறோம்.

ஆழ்வார்களில் குறிப்பாக நம்மாழ்வார் பெருமானுடைய பாசுரங்களில் மும்மூர்த்தி ஒன்றெனக் கருதும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதைக் கண்டோம். பாரதியாரும் இந்த நிறப்பாகு பாடுகளில் ஒற்றுமையையும் உடன்பாட்டையும் காண்பவர். எனவே அவர் கண்ணனை இந்த ஒற்றுமையின் உடன்பாட்டின் சின்னமாகக் காண்கிறார்.

பாரதியார் கண்ணனை மத ஒற்றுமையின் வடிவமாக மட்டுமல்லாமல் சாதி ஒற்றுமை, குல ஒற்றுமையின் வடிவமாகவும் காண்கிறார். தேவர் குலத்தவன் என்று செய்தி தெரியாதவர் கூறுவர். கண்ணன் பிறந்தது மறக் குலத்தில் வளர்ந்தது இடைக் குலத்தில், சிறந்தது பார்ப்பனருள், சில செட்டி மக்களுடனும் தொடர்பு உண்டு, என்று அத்தனை சாதிகளையும் குலங்களையும் இணைத்து, பாரதி தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.