பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சனவாசன 253

"சந்திரன் சோதியுடையதாம் - அது

சத்திய நித்திய வஸ்துவாம் - அதைச்

சிந்திக்கும் போதினில் வந்து தான் - நினைச்

சேர்ந்து கழுவியருள் செய்யும் - அதன்

"மந்திரத்தால் இவ்வுலகெலாம் - வந்த

மாயக் களிப்பெருங் கூத்து காண் - இதைச்

சந்ததம் பொய்யென்றுரைத்திடும் - மடச்

சாத்திரம் பொய்யென்று தள்ளடா”

என்றும்,

" ஆதித்தனிப் பொருள் ஆகுமோர் - கடல்

ஆரும் குமிழியுயிர்களாம் - அந்தச்

சோதியறி வென்னும் ஞாயிறு - தன்னைச்

சூழ்ந்த கதிர்களுயிர்களாம் - இங்கு

மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்

மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் - வண்ண

நீதி யறிந்தின்ப மெய்தியே - ஒரு

நேர்மைத் தொழிலில் இயங்குவார்”

என்று பாரதி பாடுகிறார்.

இந்த உலகம் உண்மையானது. சந்திரன் அதன் ஒளி, கடல் அதன் குமிழிகள், ஞாயிறு அதன் கதிர்கள், அவைகளின் தோன்றும் வண்ணங்கள், உயிர்கள், பொருள்கள் அனைத்தும் உண்மை, இதைப் பொய்யென்று கூறும் சாத்திரங்கள் பொய்யாகும் என்னும் தத்துவத்தை இங்கு பாரதி எடுத்துக் கூறுகிறார்.