பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

40


“ இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை

இருநிலம் கால் தீநீர் விண் பூதம் ஐந்தாய்

செந்திறத்த தமிழோசை வட சொல்லாகித்

திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி

அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா

அந்தணனை அந்தணர் மாட்டந்தி வைத்த

மந்திரத்தை, மந்திரத்தால் மறவாதென்றும்,

வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே”


என்றெல்லாம் ஆழ்வார் பெரு மகிழ்ச்சி கொண்டு திருமாலின் பெருமைதனைப் பாடுகிறார்.

இன்னும் பொய்கை ஆழ்வார், தனது முதல் திருவந்தாதியில்,

“ இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
 
அறைபுனலும் செந்தீயுமாவான்”


என்றும்,

"வானாகித் தீயாய் மற் கடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே”


என்றும் பாடுகிறார்.

இன்னும் பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியில்,

"வருங்கால் இருநிலனும் மால் விசும்பும்

காற்றும் நெருங்கு தீ நீருவுமானான்”

என்றும்,