பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

2


பற்றிய பல சாத்திரங்களும் உருவாக்கப்பட்டும், கால்நடை பராமரிப்பு, சாகு படி, பொருள் வினியோகம், வானிலை ஆய்வு, கணிதம், சிற்பம், மருத்துவம் இசை மற்றும் பல அறிவியல் பிரிவுகளும் தோன்றி வளர்ச்சியடைந்து பாரத சமுதாயம் நிலை பெற்றிருந்தது.

தமிழகத்திலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்கள் பிரிக்கப் பட்டும், அதன் பண்புகள், வழிபாடுகள், செயல்முறைகள் வகுக்கப் பட்டும், வேதக் கலாச்சாரத்துடனும், ஆகம வழிமுறைகளுடன் இணைந்தும், பாரதக் கலாச்சாரத்தின் பகுதியாக வளர்ச்சி பெற்றிருந்தது.

வேத உபநிடதக்கருத்துக்களுக்கும், ஆகமக் கருத்துக்களுக்கும் சங்க கால இலக்கியக் கருத்துக்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்டு, பெளத்த, சமணக் கருத்துக்கள் பாரதம் முழுவதும் பரவி வளர்ச்சி பெற்றது. புத்தமும், சமணமும் சர்வஜன சமத்துவக் கருத்துக்களையும், ஜீவகாருண்யக் கருத்துக்களையும் பாரதக் கலாச் சாரத்தில் பலமாக வேரூன்றச் செய்தன. ஆயினும், வாழ்க்கையிலிருந்து விலகி துறவு பூண்டு, தனிமைப்படும் மாயா வாதக் கருத்துக்களை வலியுறுத்திய புத்த சமணக் கருத்துக்களையும் நடைமுறைகளையும் பாரதம் அநேகமாக நிராகரித்து விட்டது என்றே கூறலாம்.

இந்த சமயத்தில் பாரதத்தை முழுவதும் ஒன்று படுத்தி உணர்வூட்டி, புதிய தெம்பை ஊக்குவித்து மீண்டும் பாரத தர்மத்தை நிலை நாட்டும் முறையில், பகவான் ஆதி சங்கரர், வேத வழிபாடுகளை இணைத்து அறுசமயங்களையும் ஒருமுகப்படுத்தி வேதாந்த தத்துவத்தை நிலை நாட்டினார். பகவான் இராமானுஜாச்சாரியார் பகவத் கீதைக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதி மக்களுடைய உணர்வில் ஒரு வேகத்தை உண்டாக்கி, விசிஷ்டாத்வத முறையில் வேதாந்த விளங்களைக் கொடுத்து வைணவசம் பிரதாயத்தை முதன்மைப் படுத்திப் பரப்பினார்.