பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 95 பாண்டியனால் உதவப்பெற்ற இச்சித்திரமாயன், பல்லவமல்லன் சேனாபதியாற் போரிற் கொல்லப் பட்டான். ஆயினும், நெடுமாறன் அப்பல்லவனை, விடாமற் பலவிடங்களிலும் எதிர்த்தவனென்று கூறப் படுகின்றான். இப்போர்கள், சித்தரமாயனுடைய மக்கள் பொருட்டு நிகழ்த்தப்பட்டனவாதல்வேண்டும் என்பர், முற்கூறிய துரையவர்கள். இக்கருத்துப் பொருத்தமுடையதாயயின், சித்திரமாயன் மக்கள் நெடுமாறனுக்கு மைத்துன முறையினர் ஆவர். அப்போது நெடுமாறன் அவர்கட்குச் செய்த உத வியை ஆழ்வார் திருவுளத்துக்கொண்டு அவ்வாறு பாடி யிருத்தல் கூடியதே. 1. இப்போர்களிலே பல்லவமல்லன் வெற்றி பெற்ற னென்று திருமங்கை மன்னனது பரமேச்சுர விண்ணகரம் பதிகமும், நெடுமாறன் வெற்றி பெற்றவனாக வேள்விகுடிச் சாஸனமும் கூறும். இதனால், அவ்விருவம் வெற்றி கோல் விகளை மாறி மாறிப் பெற்றவர்கள் என்பது பெறப்படு கின்றது. அப்பல்லவனுடன் பொருத மாறவர்மனை உலகுடை மன்னவன் தென்னவன்' என்று திருமங்கை மன்னன் அப்பதிகத்துச் சிறப்பித்ததற்கியைய, பெரியாழ்வார் அவனைக் கோ நெடுமாறன் என்று விசேடித்துப் பெயர் கூறுதல் ஒப்பிடத்தக்கது.கோ என்பது அரசர்க்கரசன் என்ற வழக்குங் காண்க. "கேரக் கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர்' என்றார் பின்னோரும். கூடல் வஞ்சி கோழி என்ற மூன்று தலைநகரங்கட்கு முரியனாக மாறவர்மனாகிய நெடுமாறளை வேள்விகுடிச் சாஸனங் கூறுதலால், அவன் உலகுடை மன்னவன், கோ என்ற விசேடணங்கட்கு உரியவனாதல் காண்க.