பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 119 “ கீழ்வானம் வெள்களென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்" (8) “ வந்தெங்குங் கோழி யழைத்தனகாண் மாதவிப் பந்தர்மேற் பல்காற் குயிலினங்கள் கூவினகாண்' (18) 14 புள்ளுஞ் சிலம்பினகாண் புள்ளரை யன்கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ (6) “ வெள்ளத் தரவிற் றுயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள வெழுந்து அரீஇ என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6) என்பவற்றால், கீழ்வானம் வெளுப்பதும், கோழியழைப் பதும், பறவைகள் கூவுவதும், முனிவரும் யோகிகளும் துயிலெழுந்து ஹரி முழக்கிடுவதும் ஆகிய விடிதற் குறிப்பு நிகழ்வதைச் சுட்டி, அவை நிகழ்வதற்கு முன்பே விரத நியமத்தை முடிக்கவேண்டி மகளிர் விரை தல் கூறப்படுதலின், 5-மணிக்குப் பின்பும் மகளிர் நீராட்ட மும் நோன்பும் நடந்தன ஆகா. அவ்வாறாயின், நித்திய மாகத் துயிலுணர்ந்து நீராடுதற்குரிய நேரமே நைமித் திகமாய்ச் சிறந்த இந்நோன்பின் நிராட்டத்துக்குங் கொள்ளவேண்டுதலின் அது பொருத்தமற்றதென்க. இங்ஙனம் வைகறைக்கு முன்பே துயிலெழுந்து நீராடுவதைக் குறிப்பிடும் மேற்குறித்த 13-ம் திருப்பா வைப் பாசுரத்துள்“ பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்றுப் புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்', என்று கூறாநின்றார், நம் கோதைப் பிராட்டியார். அதி காலையில் சுக்கிரோதயத்தைக் கண்டு நீராடுவதோ