பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 ஆழ்வார்கள் காலநிலை பிரயாணமோ நிகழ்த்துதல் எக்காலத்தும் நடைபெற்று வந்த வழக்கேயாம். 44 வெள்ளியு மிருவிசும் பேர்தரும் புள்ளும் உயர்சினைக் குடம்பைக் குரறோற் றினவே" (புறநா. 397). “ வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்பய் புலரி விடியற் பகடுபல வாழ்த்தி " (ஷை, 385). 14 மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர... பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்ப" (க்ஷ, 398). “ விளக்குறு வெள்ளி முளைத்துமுற் றோன்ற... தெளித்தலைத் தெண்ணீர் குளித்தன னாடி பெருங்கதை. (1, 53, 81). “ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் (பொருக, 72). என்று இவ்வாறு பழங்காலத்தும் விடிவெள்ளியின் உதயங்கண்டு நன்மக்கள் வேண்டிய காரியம் நடத்தி வந்தனர் என்பது தெரியலாம். ஆனால், ஆண்டாளோ, அவ்வாறு 'வெள்ளி யெழுந்து' என்றதுடன் நில்லாது 'வியாழம் உறங் கிற்று' என்று, வேறு கிரகத்தின் நடை யொன்றையுஞ் சேர்த்துப்பாடுதல் காணலாம். மார்கழி மாதத்துப் பௌர்ணிமையில் விடிவதற்கு முன் சுக்கிரோதயம் நிகழ வேண்டுமென்ற நியதியே யில்லை. அம்மாதத்து வைகறைகளிலே வெள்ளி எழுவது, சிலவாண்டுகள் நேர்ந்தும் இடையிட்டும் உண் டாகக்கூடிய நிகழ்ச்சியேயன்றி ஒரு முறைக்கு உரிய தன்று. அவ்வாறிருக்க, அவ்வெள்ளி ஒருபுறம் உதய மாக மறுபுறம் வியாழம் அஸ்தமித்ததென்று கோதை யார் குறிப்பிட்டுக் கூறலாயின ரெனின், அஃது அவர்