பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 ஆழ்வார்கள் காலநிலை தமது பெருஞ் செல்வநிலையையும், பெரிய வள்ளன் மையையும், அதனால் புலவர்போற்றுந் தம் புகழையும், பொய்ம்மொழியொன் றில்லாத தம் மெய்ம்மைத் திறத்தையும், கைம்மாறு கருதாது மாநிலத்தார்க்கு வழங்கும் மாரிபோன்ற தம் பேரருளையும், தம் தமிழ்ப் பெரும் புலமையையும், கவிபாடுந் திறத்தையும் பதிகவிறுதிகளிற் பாடுகின்றார். மனைவி மக்கள் பலருடையராகவும்', வேட்டையாடு வதில் விருப்பமிக்கிருந்தவராகவும், அரசர் முதலிய 1. வெந்திறற் களிறும் வேலைவாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்-இந்திரற் கருளி. யெமக்கு மீந்தருளும் எந்தை ' (1, 4, 7) | 2. 'கற்றார் பரவும் மங்கையர்கோன் காரார்புயற்கைக் கலிகன்றி' (5, 1, 10) 'பாரணிந்த தொல்புகழான்' (4, 4, 10) 3. 'மொய்ம்பொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்' (6, 6, 10.) 4. 'அருண்மாரி' (3, 4, 10; 4 2 10; 8, 6, 10} ‘அலை நீருலகுக்கருளே புரியுங் காரார் புயற்கைக் கலிகன்றி' (3, 2, 10) 5. 'இருந்தமிழ் நூற் புலவன்' (1, 7, 10) 6, 'பாடேன் தொண்டர் தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு ’ (7, 2, 2.) 7. காவித்தடங்கண் மடவார்கேள்வன்' (6, 10, 10.) கொங்கு மலர்க் குழலியர்வேள்' (3, 14, 10) 'பிறிந்தேன் பெற்ற மக்கள்' (6, 2, 4) 8. சினத்தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடுந் திளைத்திட், டோடியு முழன்று முயிர்களே கொன்றேன்' (1, 6, 6.)