பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 135 பிறர்க்குப் பெரிதும் உழைத்துத் தம்வாழ்நாளின் ஒரு பகுதியைக் கழித்தவராகவும்', பரம்பரையே திருமாற் கடியரானவர் குலத்தில் உதித்தவராகவும், தாய் தந்தையர் காலஞ்சென்றபின் தாம் அவ்வடிமைத் திறத்தில் முனைந்து நின்றவராகவும், அதனால் தெள்ளியராய்த் திருமாலருளைச் சிக்கெனப் பெற்றவ ராகவும், தங்குடும்பத்தை முற்றத் துறந்து, திருப் பதிகடோறும் சென்றுபாடித் திருமாலடியாரென்று தேசமறியத் திரிந்தவராகவும் தம்வாழ்க்கை வரலாறு களைக் குறிப்பிக்கின்றார், கலியன் கலிகன்றி பரகாலன் என்பன இவர்க்குத் திருநாமங்கள் என்பது இவர் திருவாக்கினின்றே தெரியலாம். இவரைக் கள்வர்மரபினர் என்றும், சபரர் 1. 'பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத் தேழை யானேன்' (1, 9,7.) 2. 'எந்தை தந்தை தம்மானென்றென் றெமரே ழேழளவும், வந்து நின்ற தொண்டர்' (4, 9, 9) 'எந்தாதை யப்பா லெழுவர் பழவடிமை வந்தார் (7, 2, 6) 3. 'எம்மானு மெம்மனையு மென்னைப்பெற் றொழிந்த தற்பின்-அம்மானு மம்மனையு மடியேனுக் காகிநின்ற... சுடரே ' (7, 2, 3) 4. 'கண்டவா திரிதந்தேனேலும்.. சிக்கெனத் திரு வருள் பெற்றேன்' 1, 1, 5) 5. பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிரென் றிவர் பின்னுதவா தறிந்தேன்' (6, 2, 4,) 6. 'தேசமறிய உமக்கேயாளாய்த் திரிகின்றோமுக்கு' (49, 4.)