பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 137 ஆழ்வார்க்குச் சிறந்தது யாது? என்பதும் நாம் இறுக்க வேண்டிய கேள்வியாகின்றது. முன்னதிகாரத்தில் பெரியாழ்வார், ஆண்டாள் முதலிய அடியார்கள்காலத்தே திருமங்கைமன்னனும் வாழ்ந்தவர் என்று திவ்வசூரிசரிதங் கூறுதலைக் குறிப்பிட்டேன், அதனால், அவ்வடியார்க்கு உரியதாகக் கண்ட. 8-ஆம் நூற்றாண்டு, இவ்வாழ்வார்க்கும் ஏற்புடைய தென்பது தெரியலாம். இனி, திருமங்கைமன்னனும் திருஞானசம்பந்தரும் ஒருவர்க்கொருவர் அளவளாவியவர் என்று, ஆழ்வார் வரலாறு கூறும் எல்லா நூல்களும் எடுத்துரைக் கின்றன. இதனால், அவ்வைதிக சமயத்தடியார் இரு வரும் ஒருகாலத்தவர் என்பது முன்னோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்ததென்பது நன்குவிளங்கும். இவ்வாறு ஒப்ப வமைந்த ' வழக்கை யாரும் அவ்வளவு எளியதாகத் தள்ளிவிடல் இயலாதன்றோ ? தள்ளுதல் இயலுமாயின், எதுதான் கொள்ளுதற்கு உரியதாகும்? ஆதலால், திரு ஞானசம்பந்தர் காலம் திருமங்கை மன்னனுக்கும் உரிய தென்று வைஷ்ணவசரித்திர வழக்கின்படி நாம் கொண்டு ஆராய்வது இன்றியமையாததாம். சம்பந்தர்வாழ்ந்தகாலம் 7-ஆம் நூற்றாண்டு என்பது முடிந்த கொள்கை, எனவே, மேற் கூறியவாறு பெரி யாழ்வாரும் அவர் திருமகளாரும் வாழ்ந்த 8-ஆம் நூற் றாண்டின் முற்பகுதியும், ஞானசம்பந்தர் வாழ்ந்த 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியுமே திருமங்கைமன்னனுக்கு ஏற்புடைய காலமாகக் கொள்ளக்கூடியதாகின்றது. இதன் உண்மையை, இவ்வாழ்வார் திருவாக்குக்களை யும் பிறசாதனங்களையுங்கொண்டு இனி ஆராய்வேன்.