பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 153 அந்நந்திவர்மன் மகனான தந்திவர்மன்காலத்தும் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தவராயின், அவன் காலத்துச் செய்திகளையும் அவர் கூறாமற் போகார். அவ் வாறு ஒன்றுங்கூறாது தந்தையான நந்தியின் செய்தி களையே ஆழ்வார் விரித்துரைத்தலால், அப்பெரியார் காலத்தில் பிரபலனாயிருந்த பல்லவவேந்தன் அந்தந்தி வர்மன் என்றே சொல்லலாம், இது பற்றியே, “பார்மன்னு பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ண கரம்” என்று, தம் காலத்தில் அப் பல்லவவேந்தன் அரசியலில் நிலை பெற்று விளங்கிநின்ற செய்தியை இருமுறை நிகழ்காலத்தாற் கூறுதல் குறிப் பிடத்தக்கது. இவ்வாறே, இப்பல்லவனுக்குப் பகைவனா யிருந்த பாண்டியனை "உலகுடை மன்னவன் தென்னவனை” என் பர் ஆழ்வார். இப்பாண்டியன் பெருவலி பெற்றிருந்த மாறவர்மன் என்ற நெடுமாறன் என்பது. பெரியாழ் வாரைப் பற்றிய அதிகாரத்தில் விளக்கப்பட்டது. இந் நெடுமாறனும் தம் காலத்தவனே என்பதை உலகுடை மன்னவன்' என்பதனால் ஆழ்வார் குறிப்பித்தல் காண்க. இவற்றால், ஆழ்வார்காலத்துப் பல்லவர் பெருந் தகையாயிருந்தவன், அவராற் பரமேச்சுர விண்ண கரப் பதிகத்துப் புகழப்பட்ட நந்திவர்மன் என்றே தோற்று கிறான். இந்நந்தியின் மகன் தந்திவர்மன் 780-ல் பட்டம் பெற்றவன், 780-க்குப் பின்பு திருமங்கையார் வாழ்ந்தவ ரெனின், அது, அவர் சம்பந்தமாக வழங்கும் செய்திகள் சிலவற்றுடன் முரணத் தடையில்லை. திருமங்கை மன்னன் சம்பந்தமூர்த்திகள் காலத்தவர் என்று திவ்ய