பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 ஆழ்வார்கள் காலநிலை அதனால், உத்தரமேலூர்ச் சாஸனத்துக் கண்ட தடாகப் பெயரிலிருந்து அச்சாஸன காலத்தவனான தந்திவர்மனுக்கேனும், அவன் தந்தை நந்திவர்மனுக் கேனும் வயிரமேகப்பெயர் வழங்கிவந்ததென்று நாம் கருதலாம். தந்திவர்மனாயின், தன் பாட்டனும் இரட்ட வேந்தனும் வயிரமேகன் என்ற பெயருடையவனுமான தந்தி துர்க்கனிடமிருந்து அப்பெயர் அவன் பெற்றவ னாதல் வேண்டும்." இவ்வாறன்றி அவன் தந்தை நந்திவர்மனாயின் 754-ல் தன்னை வென்று சமாதானமாகித் தன்மகளையும் மணம் புரிவித்துச் சென்றவனான அவ்விரட்ட வேந்தன் பெயரை, மேலே நான் கூறியபடி, தன் கௌரவ நாமமாக அவன் தரித்தவனாதல் வேண்டும். இவற்றுள் எது நேர்மையுடையது என்பது ஆராய்ந்து தெளியத் தக்கது. திருமங்கை மன்னன் பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற்கூறும் போர்கள் பலவும் பல்லவ மல்லன் என்ற நந்திவர்மன் காலத்து நிகழ்ச்சிகள் என்பது மேலே விளக்கப்பட்டது. மகேந்திர தடாகம் என்று தன் பெயரால் மகேந்திரவர்மன் வெட்டிய ஏரியாலும், அவனே தன் சிறப்புப்பெயரையிட்டுப் பெரும்பிடுகு வாய்க்கால் என்று பாலாற்றிலிருந்து அமைத்த நீர்க்காலாலும், இவ்வாறே பர மேசுவர தடாகம், சித்திரமேக தடாகம், திரையனேரி என்று அவ்வப்பல்லவர் தத்தம் பெயரால் அமைத்த நீர் நிலைகளாலும் நன்கு விளங்கும். (Historical Sketches of Ancient India, pp. 367-68) 1. இவ்வாறே கருதி அறிஞர் சிலர் எழுதி வெளி பிட்டுள்ளார். (The Quarterly Journal of the Mythic Society, Vol. xiii, No 3, pp. 699-701.)