பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 165 வமிசாவளியில் 7-ஆம் எண்ணுக்குரியவனும், 767-ல் பட்டம் பெற்றவனுமாகிய பராந்தகன்-நெடுஞ்சடைய னுடைய கொட்பாட்டனே இப்பாண்டியன் என்பது தெரியவருதலால், இவன் ஆட்சி தொடங்கிய காலத்தை நாம் அளவிடக்கூடியதேயாம். தலைமுறை யொன்றுக்கு முப்பதாண்டுகொண்டு அரசர் வமிசத்தைப் பொதுவாகக் கணக்கிடுவதில் உண்மையறிய இடமுண்டு. நீண்ட தலைமுறைகட்கு இம்முப்பதாண்டளவு அதிகம் என்று சொல்லக் கூடுமேனும் குறைந்த தலைமுறைகட்கு இதனைக் கொள்வது பொருந்தும்.! இம்முறையில் நோக்குமிடத்து 767-ல் பட்டம்பெற்ற நெடுஞ்சடையனுக்கு மூன்றாந் தலைமுறையினனான அவன் கொட்பாட்டன் பட்டம் பெற்றது 677 ஆகும். இஃது உத்தேசகாலமேயாதலின் சிறிது முன்பின்னாக அமைதல் கூடியதே. அதனில் 10, 15 வருஷம் கூடக் குறைய நேருமேயன்றி நீண்டகாலங் கடவாது 3 அரசனொருவன் 50, 60-வருஷம் ஆண்ட வனாயின், அவன் மகன் பேரன் இவரது ஆட்சிக் காலவளவிற் சுருக்கமேற்படுவது இயல்பாம், அதனால், 670 அல்லது 680-ல் பட்டம் பெற்றவனாகவே நெல்வேலி வென்ற நெடுமாறனை நாம் கொள்ளத் தடையில்லை. எனவே, 1. பதிற்றுப்பத்தில் சேரர் எண்மர்க்குக் கூறப்பட்ட ஆட்சிக்காலங்களை அளவிடினும் இம்முப்பதாண்டளவே பெறப்படுதல் இங்கு அறியத்தக்கது 2, பல்லவ மன்னனுக்கும் அவன் பேரனுக்கும் இடைப்பட்ட காலம் நீண்டுளதென்று கூறக்கூடுமேனும், அந்நீட்சி மிகவும் அரியதொன்றாதலின், அத்தகையதைப் பொதுவாகக் கொள்ளுதல் கூடாதென்க.