பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

166 ஆழ்வார்கள் காலநிலை அந்நெடுமாறனைச் சைனத்தினின்று திருத்திப் பணி கொண்ட சம்பந்தரும் அக்காலத்தவரே என்பது பெறப் படுதல் கண்டுகொள்க. இரண்டாவது:- சம்பந்தர் காலத்தவராய் அவராற் புகழப்பட்ட சிறுத்தொண்ட நாயனாரை-தம்நாட்டு வேந்தனது யானைப் படைத் தலைவராயிருந்தவர் என்றும், மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக்கி' வந்தவர் என்றும் பெரியபுராணம் கூறும். சளுக்கிய ராஜதானியாகிய வாதாபியை அழித்து வெற்றி கொண்டவர் பல்லவரேயாதலின், சிறுத் தொண்டர் அப்பல்லவரது படைத்தலைவருள் ஒருவராய்ச் சென்றவர் என்பது பெறப்படுகின்றது. வாதாபி போர்-1 சரித்திரத்தை ஆராயுமிடத்து, வாதாபிநகரம் இரு முறை பல்லவரால் தாக்கியழிக்கப்பட்டுளது. உத்தேசம் 640-670-வரை ஆண்டவனும் மேற்குறித்த பல்லவ வமிசாவளியில் 3-ம் எண்ணுக்குரியவனுமான நரசிம்ம வர்மன், சளுக்கிய ராஜ்யத்தின்மேற் படையெடுத்துச் சென்று அதன் அரசனான இரண்டாம் புலகேசியுடன் பொருது அவனையும் அவனகரமான வாதாபியையும் அழித்தான் என்பது சரித்திரப் பிரசித்தம். இதுபற்றியே வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்' என்று இவன் சிறப்பிக்கப்படுவன். இவ்வாதாபி வெற்றி உத்தேசம் 640-653-க்குள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். இதுவே முதலாம் வாதாபியழிவாகும். 1. புலகேசியின் மகன் 655-ல் பட்டம் பெற்றிருத்த லாலும், 642-ல் சீனயாத்ரிகரான யுவான்சுவான் புலகேசி யின் பெருமையைப்பற்றிக் கூறுதலாலும் இக்காலம்