பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 167 வாதாபி போர்-2) இனி, இரண்டாமுறை நடந்த வாதாபியழிவு, அந்நரசிம்மவர்மன் பேரன் பரமேச்சுரவர்மன் காலத்து நிகழ்ச்சியாம். மேற்கூறிய புலகேசியின் மகன் முதல் விக்கிரமாதித்தன், தன் தந்தையும் தலைநகரமும் பல்லவரால் அழிக்கப்பட்ட அவமானம் பொறாது, பல்லவ ராஜ்யத்தின்மேற் படை யெடுத்து 674-ல் உறையூரிற் பாடியிறங்கியபோது பரமேச்சுரவர்மன் பெரும்படையுடன் அவனை யெதிர்த்துப் போர் புரிந்து விரைவில் முறியடித்தோட்டியதோடு, சளுக்கிய ராஜ்யத்தின் மேற்றானே படையெடுத்துச் சென்று அதனை நிலைகலக்கி, அதன் தலைநகரையும் அழித்தனன் என்று கூரம், கைலாசநாதர் கோயில் முதலிய இடங் களிற் கண்ட சாஸனங்கள் கூறுகின்றன. இவற்றுள் கைலாசநாதர் கோயிற் சாஸனத்தில் பரமேச்சுரவர்மன், ரணரஸிகனது நகரத்தைப் பாழாக்கின உக்கிரதண்டன்' என்று சிறப்பிக்கப்படு கின்றான், ரணரஸிகன் என்பது முதல் விக்கிரமாதித்த னுக்கு ஒரு பெயர் என்பது தெளிவாதலின், அவன் நகரம் வாதாபி என்பதில் ஐயமில்லை. இவற்றால் 674-ஐ அடுத்து இரண்டா முறையும் வாதாபி பல்லவரால் அழிபட்டதென்பது நன்கு விளங்கும். இதனை வலியுறுத்த மற்றொரு சான்றும் உண்டு. கொள்ளப்படும், நரசிம்மவர்மன் வாதாபியில் நட்ட ஜயஸ்தம்பக்கல்லில், அவனது 13-ம் ஆட்சியாண்டு குறிப் பிக்கப்படுதலால், 652-ல் இவ்வாதாபி வெற்றி நிகழ்ந்திருக்க வேண்டும். 1. சென்னைக் கிறிஸ்தவ கலாசாலைச் சரித்திராசிரிய ரான டாக்டர் N. வேங்கடரமணய்யா M. A அவர்கள்.