பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176 ஆழ்வார்கள் காலநிலை 1. முதற் படையெடுப்பு: பல்லவனான மகேந்திர வர்மன் ஆட்சித்தொடக்கத்தில் 710-க்கு அணித்தாக, இரண்டாம் புலகேசி பல்லவராஜ்யத்தின்மேற் படை யெடுத்துக் காஞ்சியைத் தாக்கினன் என்றும், இவன் பெருவலிக் காற்றாது, மகேந்திரன் தென்னாட்டில் ஓடி ஒளிக்கும்படியாயிற்றென்றும் கூறப்படுகின்றன. அதனால், வயவர சோட்டங் கண்ட' என்ற ஆழ்வார் கூற்றுக்கு இப்படையெடுப்பு ஏற்புடையதன்று என்பது தெரியலாம். 2. இரண்டாம் படையெடுப்பு: அப்புலகேசியே நெடுங் காலத்துக்குப் பின்பு, முற்கூறிய மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் காலத்தில் இரண்டாமுறை படை யெடுத்து வந்தனன் என்றும்; இவனைத் தொண்டை நாட்டில் மணிமங்கல முதலிய போர்க்களங்களில் அங்நரசிம்மவர்மன் போராடித் தோற்றோட்டச் செய்த தோடு, அவன் தலைககரான வாதாபிவரை தானே படை கொண்டு சென்று அங்ககரை அழித்தனன் என்றும், இப்போரில் புலகேசியும் இறந்து போயினன் என்றும் சொல்லப்படுகின்றன. இப்போரை ஆழ்வார் குறிப்பிட்டவராகக் கருதல் கூடியதேயாயினும் இதுவும் ஏற்றதன்று, திருமங்கை யார், பல்லவமல்லனான நந்திவன்மனது ஆட்சியின் இடைக்காலம் வரை (744-754) வாழ்ந்திருந்தவரென் பதை மேலே விளக்கிக் காட்டினேன். 640-653-க்குள் நடந்த மேற்குறித்த நரசிம்மவர்மன் வெற்றியைப் பற்றியதே ஆழ்வார் கூற்றெனின், அவ்வெற்றியை நேரில் அறிந்து பாடிய போது-நம் பெரியார்க்குக் குறைந்தது 15, 20 வயது கொண்டாலும்-625-630 ம்