பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 195 சோழன் கரிகாலனுக்குப் பின் ஆட்சி புரிந்தவன் இச்செங்கணான் என்பதும், நல்லடிக்கோன் 1 என்ற நன் மகன் இவனுக்குப் பிறந்து விளங்கினன் என்பதும் சாஸனங்களால் அறியப்படுகின்றன, இவன் பிறப்பு முதலிய பிறவரலாறுகளைப் பெரியபுராணம், திருவானைக் காப்புராணம் முதலிய பின்னூல்களிற் கண்டுகொள்க. - இங்ஙனம் காணப்பட்ட வரலாறுகளின் வேறான செய்திகள் சில இச்செங்கணானைப் பற்றித் திருமங்கை மன்னன் கூறுதல் ஈண்டு அறியத்தக்கது :' வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே (பெ. தி. 6, 6, 4) " பாராள ரவரிவரென்றழு ந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே " (ஷ 4, 6, 4) எனத் திருநறையூர்ப் பதிகத்துள் ஆழ்வார் கூறுவன வற்றால், வெண்ணி .* அழுந்தை 3 என்ற போர்க்களங் 1. Ambil Plates of Sundara - Chola-Ep. Ind. Vol. XV, Verse, 13.p. 70. 2. இது கோயில் வெண்ணி, கோயிலுண்ணி என வழங்கும் சோணாட்டூர். அழுந்தை-திருவழுந்தூர் தேரழுந்தூர் என்பது இப்போதை வழக்கு.