பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

194 ஆழ்வார்கள் காலநிலை திருநறையூர்ப்பதிகத்தில் கோச்செங்கணான் என்ற சோழன், அவ்வூர்த் திருமாலிடம் பரமபத்தி பூண்டிருந் தவன் என்பதைப் பெரிதுஞ் சிறப்பிக்கின்றார். இச் சோழன் ஐந்தா நூற்றாண்டையடுத்து விளங்கியவன் என்பது மேலே கூறப்பட்டது. கழுமலம், திருப்போர்ப்புறம் 2 என்ற களங்களிலே சேரன் கணைக்காலிரும்பொறையோடு இச்செங்கணான் போர்புரிந்து அச்சேரனைச் சிறைபிடித்தவன் என்பதும், பொய்கையார் என்ற தெய்வப்புலவர் இவனது போர் வெற்றியைப் புகழ்ந்து பாடி அச்சேரனைச் சிறை மீட்டனரென்பதும் புறநானூறு களவழி நாற்பது முதலிய சங்க நூல்களால் நன்கறிந்தவை. , முற்பிறவியிலே இவன் சிலந்தியாயிருந்து திருவானைக்காச் சிவபிரானை வழிபட்ட சிறப்பால் பேரரசனாகப் பிறந்து அப்பிரானுக்குப் பல மாடக் கோயில்கள் எடுத்துப் பெருமைபெற்றவவெனன்பதும் அதனால் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவராக நன்கு மதிக்கப்பட்டவன் என்பதும் தேவார முதலிய சைவத் திரு முறைகளால் தெரியலாம். இவன் பிறந்தநாள் இரேவதி என்பர் முத்தொள்ளாயிரமுடையார். 3 1. இந்நூல், பக். 62, கீழ்க்குறிப்பு. 2. 'திருப்பேர்ப்புறம்' என்பது நேர்பாடம் போலும். திருப்பேர் என்பது 'அப்பக்குடத்தான்' என வழங்கும் சோணாட்டுத் திருமால் திருப்பதியாம். 3. "அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர், மந்தரம் போன் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை, இலங்கிலை வேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ, சிலம்பிதன் கூடிழந்த வாறு" (தொல். பொருளதி. 91, நச். உரை ) என்பதனால் அறிக.