பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 207 கொண்டு அன்னோர் தழுவியிருந்த சமயம் இன்ன வென்று கொள்ளத் தடையில்லை. இதனால், பெரியாழ்வார் திருமங்கையார் காலத்துப் பாண்டியன் பல்லவன் போன்ற அரசர்கள் திருமால்பத்திமை சிறப்பக் கொண்டிருந்தவராயினும், ஏனைய வைதிக சமயக் கடவுளரை வழிபட்டும் திருப்பணி செய்தும் போந்தவர் என்றே அறிந்து கொள்க. | மகளிர் இகழ்தல் இனி, திருமங்கை மன்னன் தம் பெரிய திருமொழி யின் முதற்பத்து மூன்றாந்திருப்பதிக முழுதினும்தமக்கு மூப்பு வருவதுணர்ந்து, அதுமுதிர்ந்து மகளிர் இகழும்படி நேர்வதற்குமுன்பே, வடநாட்டுள்ள' வதரி என்ற திருப்பதியை வணங்க விரும்புவதாகத் திருவுளங் கொண்டு, தம் நெஞ்சை நோக்கி', ஒருவரையுணர்த்துக் தன்மைப்பன்மையில் வதரி வணங்குதுமே' என்ற தொடர் பாடலிறுதி தோறும்வரப் பாடுகின்றார். அவற்றுள் ஏழாம் பாசுரம் ஈண்டு ஆராய்ச்சிக்கு உரிய தாம். அது வருமாறு: p. 515) முகுந்தன் பாதங்களை எப்போதும் சிரசில் தரிப்பவன்' என்று நிருபதுங்கவர்மனும் (S. ii. 11, p. 507) சாஸனங்களிற் சிறப்பிக்கப்படுதல் காண்க. முதல் மகேந்திர வர்மன், இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராஜசிங்கன் இவர்களைச் சிவபக்தர்களாகச் சாஸனங்கள் கூறுதல் மேலே பலவிடங்களினுங் குறிக்கப்பட்டது. 1. தம் திருவுள்ளத்தை விளித்து ஆழ்வார் கூறியதாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கருத்தருளிச் செய்தலுங் காண்க.