பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

216 ஆழ்வார்கள் காலநிலை சிறப்பிக்கின்--என்ற கருத்துக் கொள்ளற்கு இழுக் கெள்க! பெரியாழ்வாரும் "குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச், சிறுகானெறியே போக்குஞ் செல்வன்" என்று இவ்வாறே பாடுதலை மேலே விளக்கியுள்ளேன். (பக். 92) இக்கருத்தே சுந்தரமூர்த்திகட்கும் உரியதன்றாயின், 'கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்' என்று, • தங்காலத்துப் பல்லவன் உலகமெலாம் ஆளும் பேரரசன்' என்று, அவன் பெருமை விளங்கப் பாடார் என்பது திண்ணம், இந்நாயனாரை அபிமானித்து வளர்த்தவர் திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான நரசிங்கமுனையரையர் என்று பெரியபுராணங்கூறும். 7-8ஆம் நூற்றாண்டுகளி விருந்த அந்நாட்டினரசா பவ்லவர்க்குக கீழ்ப்பட்டிருந்தவர் களே, பேரரசர் கொள்ளும் பெயர்களையே அவர்கீழ்ச் சிற்றரசர் தமக்குரிய கௌரவ நாமமாகத் தரித்துவந்தவர் என்பதற்கு எண்ணிறந்த சாஸனப் பிரமாணங்கள் உள்ளன. அம்முறையில், சுந்தரமூர்த்திகளை அபிமானித்த முனையரை யரும், தம் தலைமையரசன் பெயரையே தரித்தவராதல் வேண்டும் என்று, நரசிங்கர் என்ற அவர் நாமத்தினின்றே கருதல் பொருந்தும் 7-ம் நூற்றாண்டில் நரசிங்கவர்மன் என்ற பெயர் கொண்டிருந்த பல்லவரிருவருள், முதலாமவன் ஞானசம்பந்தர்க்கும் முற்பட்டவனாதலாலும், 8-9-ம் நூற்றாண்டுகளில் அப்பெயர் பூண்ட பல்லவர் வேறில்லாமை யாலும், நரசிங்கமுனையரையர் காலத்துத் தலைமைவேந்தன் இரண்டாம் நரசிம்மவன்மனான இராஜசிங்கனேயாதல் வேண்டும் என்க. எனவே, இவனே---காடவர்கோன் கழற் சிங்கன்' என்று சுந்தரமூர்த்திகளால் பாடப்பட்டவன் என்பது மிகப்பொருத்தமாதல் காண்க. இவற்றினின்று, சுந்தரமூர்த்திகள் சம்பந்தர்க்கு 20-25 ஆண்டுகளே பிற்பட் டிருந்தவர் என்பது தெரியலாம். 'நாவின்மிசை யரையன் னொடு தமிழ்ஞான சம்பந்தன், யாவர் சிவனடியார்களுக் கடியானடித் தொண்டன்' (தேவா, கேதாரம், சுரு 10} எனச் சுந்தரமூர்த்திகள் அவ்வடியார்கட்குத் தாம் அடுத்திருந்த நிலைமையைக் குறிப்பிடுதலும் காண்க.