பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 215 தோட் சிங்கனவனென்பவே” என்ற பழம்பாடலாலும் (யாப், வி. 87.) அறியப்படும். நரசிம்மன் என்பது இராஜசிம்மனுக்கு வேறு பெயர். நரசிங்கன் என்பது சிங்கனெனவும் வழங்குதலை, சிங்கப் பிரான்” (திருவாய்.) 'சிங்கப்பெருமாள்' என்பவற்றால் உணர்க. சேரமான் பெருமாணாயனாரும், சுந்தரமூர்த்தி களும் கயிலை சென்ற காலத்தைக் குறிப்பதற்கு வழங்கிய அப்தமே கொல்லமாண்டு என்பதும், அதனால் அச்சிவனடியா சிருவரும் கி. பி. 825-வரை வாழ்ந்த வராவர் என்பதும் ஒருசாரார் கொள்கை. ' அன்னோர் கருத்துப் பொருத்தமானதன்று. 'கொல்லம் தோன்றி' இன்ன ஆண்டு-என்றே மலையாள நாட்டுச் சாஸனங்கள் பலவற்றிற் காணப்படுவதால் (T. A. S. V, 44.) கொல்லநகரம் உண்டானதைக் குறிக்க அவ்வப்தம் வழங்கியதேயன்றிப் பிறிதன்று. அந்நகரம் இன்னாரால் உண்டாக்கப்பட்டது என்பதுபற்றிக் காலஞ்சென்ற ஸ்ரீமாந். கோபிநாதராயர் அவர்கள் நன்கு விளக்கியிருத்தல் அறியத் தக்க து (Ibid. Vol. ii pp 73: 76-77). வேறு சிலா "பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமானை” என்று சுந்தரமூர்த்திகள் பாடுதலினின்று அவர் காலத்தே பல்லவர் வலிமை குன்றியிருந்த நிலைமை வெளியாவதாகக் கொண்டு அந்நிலைமை இரட்டை வேந்தனான மூன்றாங் கோவிந்தனது படையெடுப்பால் 803-ல் தந்திவர்மனது ஆட்சியில் உண்டானமையின், அப்பல்லவன் காலத்தவரே அந்நாயனார்--என்று கருதுவர். "பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரைச் சிவபிரான் கலங்கச் செய்கின்றார்' என்பதனால், பல்லவரை வலி குன்றிய வராகக் கருதல் என்னோ ?

  • அடங்காத பிறவேந்தரும் அடங்கித் திறை செலுத்தும்படி ஈசன் தன்னடியனான அரசற்கு அருள் செய் கின்றான்' என்று தற்காலத்துப் பல்லவன் அடிமைத் திறத்தால் அடைந்துவரும் பெருமையை அந்நாயனார்