பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

218 ஆழ்வார்கள் கால நிலை வீழ்ந்ததும் அஃது ஒரு வித்யாதர உருவமாகமாறிப் பரமனை வணங்கி விண்ணுலகை நோக்கிப் படர்ந்ததைத் தம் கண்ணாரக்கண்டு களித்ததாகவும் கூறுகின்றார்." இவ்வாறு அலைமோதும்படி திருமால் சந்நிதி அமைந்திருந்த பண்டைநிலைமை அத்தண்டி அவந்தி சுந்தரிகதை பாடிய பின்பு மாறிவிட்டது. அதன் காரணம் -அப்புலவர்காலத்துப் பல்லவ னும், முற்கூறியபடி பரம சைவனுமான இரண்டாம் நரசிம்மவன்மன் என்ற இராஜசிம்மனால் அத்திருமால் சந்நிதிக்கு முன்புறமாகச் சிவலாயமொன்று கட்டிப் பிரதிஷ்டிக்கப்பட்டதே ஆகும். அதனால் அக்காலமுதற் கடலலைகள் சிவாலயத்தில் மோதுவதன்றி அவ்வாலயத் தின் பின்புறத்துள்ள திருமால் மூர்த்தத்தைத் தொடு வதற்கு இடமில்லையாயிற்று ஆகவே, அச்சிவாலயங் கட்டப்பட்டதற்குமுன் பள்ளிகொண்டருளிய பெருமாளின் திருவடிகள் அலை மோதும்படி இருந்த நிலையையே மகாகவியான தண்டி பாடலாயினர் என்பது தெளிவாதல் காணலாம். • அத்திருமால் மூர்த்தத்தின் மணிக்கட்டொன்று பின்னமுற்றதைச் சிற்பியொருவன் நன்கு செப்பனிட் டான் என்பதனாலும், அம்மூர்த்தம் பல்லவராற் பிரதிஷ்டிக்கப் பட்டது என்ற குறிப்புத் தண்டியின் வாக்கில் இன்மையாலும் மாமல்லபுரத்துக் கடற்கரைத் திருமால் மிகப் புராதனமூர்த்தியே என்று கொள்ளத் தடையில்லை என்க. 1. பாரவி தண்டிகளின் காலம்' என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீ. ஏ. ரங்கசுவாமி ஸரஸ்வதி அவர்கள், பீ ஏ., எழுதிய அரிய வியாசங் காண்க , Quarterly Journal of the Mythic Society, vol. xiii, pp, 674-79).