பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 219 மாமல்லபுரம் என்ற கடன்மல்லை, ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பே பெருந்துறைமுகப் பட்டினமாய்ப் பிரபலம் பெற்றிருந்ததாம், தொண்டைமான் இளந் திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ண னார் சிறப் பித்துப் பாடிய பெரும்பாணாற்றுப்படையுள், பெரும் பாணனைத் திரையனிடம் ஆற்றுப்படுப்போன்-- 'தொண்டைமானாடு வழிப்போக்கரை வருத்தும் கொடியோரை உடையதன்று; அதனால் விரும்பியவாறு எங்கும் இனிது தங்கி நீ செல்லக்கூடும்' என்று தொடங்கி, அந்நாட்டின் பல பகுதிகளையுங் கூறிவிட்டுப் பின்( நீர்ப்பெயற் றெல்லை போகிப் பாற்கேழ் வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை மாட மோங்கிய மணன்மலி மறுகிற் பரதர் மலிந்த பல்வேறு தெருவின் பட்டின மருங்கி னசையின் முட்டில் கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் வான மூன்றிய மதலை போல ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி விண்பொர நிவகத வேயா மாடத் திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும் துறைபிறக் கொழியப் போகி (பெரும்பாண். 319-51) என்று கடற்கரைப்பட்டினம் ஒன்றைப்பற்றி வருணித் துக்கூறுஞ் செய்தியைக் காணலாம்.