பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

232 ஆழ்வார்கள் காலநிலை பல்லவமல்லனது சிறப்புப் பெயர்களுள்ளே கலிபலமர்த்தந:” என்பதும் ஒன்றாக உதயேந்திர சாஸனங் கூறுகின்றது. அப்பல்லவன் ஆட்சியிடையில் விளங்கியவர் திருமங்கைமன்னன் என்பதையும் தங்காலத்தே அரசாட்சியில் நிலைபெற்றிருந்தவன் அவ்வேந்தனே என்பதைப் பார்மன்னு பல்லவர்கோன்' என்று பரமேச்சுரவிண்ண கரப் பதிகத்தில் இவர் குறிப் பிட்டிருத்தலையும் மேலே விளக்கியுள்ளேன். இங்ஙனம் தங்காலத்து விளங்கிய பேரரசன் பெற்றிருந்த பெயரினையே சிற்றரசரான இவ்வாழ்வார் (கலிகன்றி எனத் தம் கௌரவநாமமாகத் தரித்தனரோ என்று கருதவும் இடமுண்டு . கலிகன்றி என்பது, கலியின் வலிமையை ஒடுக்குடவர்--என்ற பொருளுடையதாய்க் கலிபல மர்த்தா, என்ற அப்பல்லவமல்லன் சிறப்பியற் பெயருடன் ஒத்ததாதல் காண்க. இவ்வாறே வழுதிவளநாடரான சடகோபர்க்கு வழங்கிய மாறன், பராங்குசன் என்ற நாமங்கள், அக் அதர்வணமும் என்பாருமுளர்; அது பொருந்தாது; இவர் (தொல்காப்பியர்) நூல் செய்த பின்னர் வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்குகூறாக இவற்றைச் செய்தாராதலின்” என்றெழுதினர். கலித் தொகைக் கடவுள் வாழ்த்துப் பாட்டுரையினும் இவ்வாறே இவர் கூறுதல் காண்க. இங்ஙனம் இவர் எழுதிச் செல்லுதற்கு யாதொரு பிரமாணமும் கிடைத்திலது என்பர் வடநூலார். தலவகாரம் என்று இவர் கூறியது, சாமவே தசாகைகளுள் ஒன்றாம்; தலவகார சாமம், (Ep. Rep No.ii, 1197) தலவ காரசரணம் (T. A. S. vol. j, p.9) என்ற சாஸனவழக்கும் காண்க. 1. SI. I. vol. ii, p. 367, line. 29.