பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 235 பன்னிருபாட்டியலுடையார்- மகளிர் மடலேறார் என்றும், ஆனாற் கடவுளரைத் தலைவராகவைத்துப் பாடுமிடத்து அவர் மடலேறுவதாகக் கூறப்படும் என்றும் மடற்கிலக்கணம் வகுப்பர் (241-26 சூத்திரங்' கள்). இதனாற் பெண்ணொருத்தி மடலேறுவதாக ஆழ்வார் பாடியது, அப்பாட்டியல் முறைக்குப் பெரிதும் பொருந்துவதென்னலாம், மகளிர்க்கு மடலேறும் வழக் கில்லை என்பதைத் - திருமங்கைமன்னனே பெரிய திருமடலில் ......................காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் மானோக்கின் அன்ன நடையா ரலரேச வாடவர்மேல் மன்னு மடலூரா ரென்பதோர் வாசகமும் தென்னுரையிற் கேட்டறிவ துண்டதனை யாந்தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் எனப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பாடுதலும் ஈண்டு நோக்கத்தக்கது. இனித் திருமங்கைமன்னன் தம் திருப்பதிகங்களின் முடிவுகளிலே* இருங்கட லுலக மாண்டுவெண் குடைக்கீழ் இமையவ ராகுவர் தாமே' * வங்க மாகடல் வையங்கா வலராகி வானுல காள்வாரே ' * முடிகொண்டு முடிமனர்தம் முதல்வர்முத லாவரே 1 * தேர்மன்னரா யொலிமா கடல்சூழ் செழுநீருல காண்டு திகழ்வர்களே, ' என்று இவ்வாறே 26-இடங்கட்குமேல் பதிகங்கற்பார் பெறும் பயன் கூறிச் செல்வர். இங்ஙனம் பலசுருதி