பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ஆழ்வார்கள் காலநிலை அக்கடவுளிடம் அன்னோர் கொண்டிருந்த பரமபத்திக்குச் சிறந்த சான்றாகவுள்ளன. வைஷ்ணவ சமய மூல தத்துவங்கள் பலவும் ஆழ்வார்கள் வாக்கிற்போல இவர்கள் பாடல்களினும் காணப்படுதல் ஆய்ந்தறிதற் குரியது. இவரன்றி விளக்கத்தனார், கவிசாகரப் பெருந்தேவனார்' முதலாகவுள்ள வேறு புலவர்களும் வைணவசமயிகளாகவே தெரிய வருகின்றனர். வள்ளுவர் உள்ளம் தொல்காப்பியனார் நீங்க, திருவள்ளுவரினும் பழைமை பெருமை வாய்ந்த புலவர் யாவருளர்? அப் புலவர்பெருமானைப்பற்றி வழங்கும் கதைகளின் உண்மை எத்தகையதாயினும், அவர்தம் வாக்களவிற் கொண்டு நோக்குமிடத்துத் திருமால் சமயத்துக்கு அவர் காலத்திருந்த சிறப்பியல்பு வெளியாகத் தடை யில்லை . “ சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்." ! (கல்லா .) என்று சிறப்பிக்கப்படும் அத்தெய்வப்புலவர், பிற கடவுளர் எவரையுங் குறிப்பிடாத நிலையில் - 1. யான் செந்தமிழ்ப் பத்திரிகையிற் பதிப்பித்துவரும் பெருந்தொகை' என்ற நூலின் 15ஆம் பாடலையும், அதன் கீழ்க்குறிப்பையும் நோக்குக. 2. "பூவிற்குத் தாமரையே பொன்னிற்குச் சாம்புனதம் -ஆவிற் கருமுனியா யானைக் கமரரும்பல்-தேவிற் றிருமால் எனச் சிறந்த தென்பவே-பாவிற்கு வள்ளுவர்வெண் பா என்ற திருவள்ளுவமாலை வெண்பா (36) இப்புலவர் வாக்காதல் காண்க.