பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

272 ஆழ்வார்கள் காலநிலை ஒருகால் மலையாளப்பாடமே உண்மையுடையதாகக் கொள்ளினும், அதனால் முகுந்தமாலை இயற்றியவர் குலசேகரர் என்பது பெறப்படுமேயன்றிக் குலசேகராழ் வாரே அக்குலசேகரர் என்பது தெளிவாக வழியில்லை. ஆழ்வார் அருளியதே முகுந்தமாலை என்ற கொள் கையில் ஸம்ப்ரதாயஸ்தரான பெரியோர் பலர்க்கு ஐயப் பாடு பெரிதுமுண்டு, அன்னோர் ஐயுறுதற்குரிய காரணம் அடியில்வருமாறு: முகுந்த மாலை ஆழ்வார் அருளிச் செயலாயின், பெருமாள் திருமொழியைப் பாடியதாகக் கூறும் பழைய நூலான திவ்யசூரிசரிதம் அம்மாலையையுங் குறிப்பிடா மற் போகாதென்பது திண்ணம், குலசேகரர் நட்பின ரைப்பற்றி முகுந்தமாலை கூறும் முக்கியமான செய்தி யையும் அந்நூல் கூறியதில்லை, இவைபோயினும், திவ்யப் பிரபந்த முதலியவற் றின் வியாக்கியானங்களிலே, கூரத்தாழ்வான் பட்டர் முதலிய பெரியோர் திருவாக்குகள் உதகரிக்கப்படுமாறு ஆளப்படுஞ் சிறப்பும், கோயில் முதலிய சந்நிதிகளிலே விசேடசமயங்களில் ஓதப்பெறும் பெருமையும் இம் முகுந்தமாலையும் பெற்றிருத்தல் வேண்டுமன்றோ? அவை யொன்றுமே இந் நூலுக்கு இல்லாமையால், சம் பிரதாய நூல்களுள்ளே அம்மாலை சேர்ந்ததன்று என் பதே முன்னோர் கருத்தாகத் தோன்றுகின்றது' என்பதே யாம். 1. காஞ்சீபுரத்தில் ஸ்ரீவைஷ்ண ஸம்ப்ரதாய கிரந்தங் களில் வல்லவராக விளங்கும் வித்வான் ஸ்ரீ: உப வே. அண்ணங்கராசாரிய ஸ்வாமி எழுதி வெளியிட்டுள்ள முகுந்த மாலைத் தமிழ் வியாக்யான பீடிகை பார்க்ச.