பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

294 ஆழ்வார்கள் காலநிலை “ பேணிச் சீருடைப் பிள்ளை 'பிறந்தினில் காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் (3) என்ற பாசுரங்களிலே நம்பி பிறந்தினில்', பிள்ளை பிறந்தினில்' என்று வழங்கப்படுகின்றன. பிறந்தினில் என்பதற்குப்--பிறந்த போது, பிறந்தவளவில் எனவும்' *பிறந்தவிதனில்' என்பதன் விகாரமாகவுமாம்' எனவும் அறிஞர்சிலர் பொருளுரைத்துள்ளார். வழங்கி வரும் பாடத்துக்கு இவ்வாறு சொல்முடிவும் பொருளும் கூறினும், இவை பெரிதும் அமைவு.ை..-யன் என்பது அவர்கட்கும் கருத்தன்று. அதனால், ஏதோ பழைய சுத்தபாடம் இங்கு மாறியது என்றே தெரியலாம். அஃது, இச்சொல்லில் ஒரெழுத்தின் ஒரு மாத்திரையை நீட்டுவதால் எளிதில் அமைதல் குறிப்பிடத்தக்கது. அஃதாவது:

  • நம்பி பிறந்தீனில்', 'பிள்ளை பிறந்தினில்'

என்பதே. கண்ணன் அவதரித்த சூதிகாகிருகம் என்பது இங்கே பொருளாம். பிறந்த ஈனில் பிறந்தினில்; பிறம் தகம் என்பது போல. ஈன் இல்-பிரஸவவீடு, பிறந்த பிள்ளையைக் காணப் புகுவதற்கும், புக்குப்போ துதற்கும் பிரஸவவீடு என்ற பொருளே மிகவும் ஏற்றதாதல் அறியத்தக்கது. ஈனில் இப்பொருளில் வழங்குதலை, " சேவல், சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழை இயர் (குறுந்தொகை. 85) * சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈனில் இழைக்க வேண்டி" (பதினொ . திருவாரூர். 19)