பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 297 என்ற முன்னூல் வழக்கும் காண்க. இச்சிறைகாவலர், தலையாரிகளைப் பாடிகாப்பார் என்பர் ! ஒன்றுகெட்டவாறே பாடிகாப்பாரைப் பிடிக்குமாபோலே” (ஈடு. 10-1-4) 'பாடிகாப்பாரே களவுகாணுமாபோலே" . (பெரிய திரு. வியாக். 8-5-1) சாஸனங்களிலும் இச்சொல்வழக்கு மிகுதியும் பயிலும், (1. M. P. pp. 190. 1634, 1655), 'கேசவனோடு இவளைக் காவலிடுமின்' என்பதே, கேசவன் பக்கத்தில் என்ற பொருள் பயப்பதாம். அதனால் பாடிகாவல்' என்பதே பழம்பாடமாதல் வேண்டும். 4. ஷ, 4-ஆம் பத்து, 5-ஆம் திருமொழி, “சோர் வினாற் பொருள்” என்ற பாசுரத்தில்-- "ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு அரவதண்டத்தி னுய்யலுமாமே ” என்ற அடியிலே, அரவதண்டம் என்பதை அறவதண்டம் என்று கொள்ளத்தகும். அறவன்- தருமனாகிய யமன். தருமபுத்திரனை அறவோன்மகனே' என்பர் முன்னோர் (புறம்). அறவதண்டம் யமதண்டனை, “தண்டமுடை-த் தருமன் என்பர் (தேவா). அப்பாசுரத்தில் ஆர்வினவிலும்' என்பது ஓசை குன்றுதலால், 'ஆர்வினாவிலும்' என்ற பாடமே கொள்ளத்தகும், 5. ஷ, 9-ஆம் திருமொழி 4-ஆம் பாசுரத்தே“பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை யென்னும் அதில்நாய கர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்"